இரவு சாப்பிட்டு முடிந்த பின்பு நடைபயிற்சி செய்தால் கிடைக்கும் நன்மைகள்..!

Healthtips walkingbenefits
By Petchi Avudaiappan Apr 08, 2022 08:19 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

நடைபயிற்சி என்றதுமே நம்மில் பலர் அதெல்லாம் செல்கிறோம்.பிளான்லாம் பண்றோம். ஆனால் நிறைவேத்த முடியல உள்ளிட்ட பல காரணங்களை அடுக்குவோம். முறைப்படி நடைபயிற்சி செல்ல முடியாதவர்கள் வேலை நேரங்களில் அதனை ஈடுகட்ட முயற்சிப்போம். நடைபயிற்சி என்றால் காலை,.மாலை தவிர்த்து  சாப்பிட்டு முடித்த பிறகு இரவில் நடைபயிற்சி செய்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காண்போம். 

  • சாப்பிட்ட பின் இரவில் நடைபயிற்சி செல்வதால் வயிற்றில் கேஸ்ட்ரிக் என்ஜைம்களின் சுரப்பு அதிகமாகி உடலில் செரிமான சக்தி மேம்படும். இதனால் வயிறு வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றது. அதேபோல் சாப்பிட்ட  உடனே ஓய்வெடுக்கச் சென்றாலோ அல்லது அமர்ந்து விட்டாலோ உடலில் கலோரிகள் தேக்கம் அடைந்து உடல் பருமன் ஏற்படக் கூடும். இதனை தவிர்க்க இரவில் நடப்பதால் கலோரிகள் ஏராளமாக எரிக்கப்படும்.
  • இரவில் நடப்பதால் உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடு மேம்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் நடக்கும் போது உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் குறைந்து நல்ல தூக்கம் கிடைக்கிறது. 
  • இரவு நடைபயிற்சி செய்தால்  உடலில் உள்ள குளுக்கோஸ் பயன்படுத்திக் கொள்ளப்படுவதால் இரத்த சர்க்கரை அளவு சீரான நிலையில் இருக்கும். இந்த சமயத்தில்  வெளிப்படும் எண்டோர்பின்ஸ் என்ற என்ஜைம் உங்கள் உடலை சுறுசுறுப்பாக உணர வைக்கும்.
  • சிலர் இரவில் தூக்கம் வராமல் கண் விழிக்கும் நேரத்தில் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்போம். இது உடல் நலனுக்கு தீமையை விளைவிக்கும் என்பதால் குறைந்தது 15 நிமிட நடைபயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும்.