உடலில் ஏற்படும் இந்த மாதிரி பிரச்சனை இருக்கா? ஒரே தீர்வு ஊறுகாய் தான் - இதை பாருங்க!
ஊறுகாய் சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஊறுகாய்
பொதுவாக மாங்காய், பூண்டு,எலுமிச்சை, நெல்லிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், வெள்ளரி உள்ளிட்ட காய்கறிகள் மூலம் ஊறுகாய் செய்வது வழக்கம்.அதே போல் , சிக்கன் ,மட்டன், இறால், கோழி போன்றவற்றைத் தொக்கு போன்ற பதத்தில் செய்து சாதம் , சப்பாத்தி, ரொட்டி உள்ளிடவைகளில் கொண்டு சாப்பிடும் வழக்கம் நம்மில் சிலருக்கு உண்டு.
ஊறுகாயில் அதிக அளவு உப்பு சேர்ப்பதால் இதய கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். இருப்பினும் ஊறுகாய் சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் சில நன்மைகள் ஏற்படுகிறது.வெள்ளரிக்காய் சார்ந்த ஊறுகாயில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளனர்.
இவை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றனர். புளித்த ஊறுகாயில் புரோபயாடிக்குகள் உள்ளன.இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும் செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகின்றனர். ஊறுகாயில் சோடியம் அதிகமாக உள்ளது.
நன்மைகள்
இது தீவிர உடல் செயல்பாடுகளின் போது வியர்வை மூலம் இழக்கப்படும் எலக்ட்ரோலைட்களை நிரப்புகிறது.ஊறுகாயில் இயற்கையாகவே கலோரிகள் குறைவாக இருப்பதால் இவை கலோரி குறைந்த சிற்றுண்டிக்குச் சிறந்த தேர்வாக உள்ளது.அதுமட்டுமில்லாமல் ஊறுகாயில் சாறு தசைப்பிடிப்புகளை விரைவில் குறைக்கும் என்று நிருபிக்கப்படுள்ளது.
இதனால் ஊறுகாய் விளையாட்டு வீரர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான தகவலை மட்டுமே தருகிறது மற்றும் தகுதியான மருத்துவ கருத்துக்கு எந்த வகையிலும் மாற்றாக இல்லை