பாட்டு கேட்டுக்கொண்டு இருந்த நபர்...திடீரென வெடித்த ஹெட்போன் - நடந்த விபரீதம்!
ஹெட்போனில் பாட்டு கேட்டபோது திடீரென வெடித்ததில் முதியவர் படுகாயம் அடைந்துள்ளார்.
வெடித்த ஹெட்போன்
மக்கள் பெரும்பாலான நேரங்களில் செல்போன் பயன்படுத்துவதோடு, ப்ளூடூத் ஹெட்போன் கனெக்ட் செய்து படம் பார்ப்பது, பாடல் கேட்பது, போனில் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறோம். இந்த சூழலில் அதீத நேரம் ஹெட்போன் பயன்படுத்துவது செவிகளுக்கு கேடு விளைவிக்கும் எனவும் விலை குறைவாக இருக்கிறது என
தரமற்ற சாதனங்களை பயன்படுத்துவது குறித்தும் மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள மாத்துக்கண்மாய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பன்னீர்செல்வம் (55). இவர் இரவு தனது வீட்டில் ப்ளூடூத் ஹெட்போன் அணிந்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்துள்ளார்.
நடந்த விபரீதம்
அப்போது, எதிர்பாராதவிதமாக ப்ளூடூத் ஹெட்போன் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதனால் அவரது காது பகுதியில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் முதியவரை ஆசுவாசப்படுத்தி அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த காலகட்டத்தில் செல்போன், ஹெட்போன் ஆகியவற்றின் பயன்பாடு முக்கியதுவமாக மாறிய நிலையில், அவற்றை பாதுகாப்பாக உபயோகிக்க விழிப்பணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.