டார்ச்சர் செய்த கணவன் - பள்ளி மாணவர்கள் உதவியோடு உடலை எரித்த டீச்சர்
கணவனுக்கு விட்டமின் மாத்திரை என்ற பெயரில் விஷ மாத்திரை கொடுத்து மனைவி கொலை செய்துள்ளார்.
கணவன் டார்ச்சர்
மகாராஷ்டிரா, யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சாந்தனு அரவிந்த் தேஷ்முக்(32) - நிதி தேஷ்முக்(24). சாந்தனு அரவிந்த் தேஷ்முக் ஆசிரியராக இருந்து வந்தார்.
அதே பள்ளியில் அவரது மனைவி நிதி தேஷ்முக் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இருவரும் காதல் திருமணம் செய்துக்கொண்டதால் தனியாக வசித்து வந்தனர். தொடர்ந்து தேஷ்முக் திடீரென மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
அதனால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். எனவே விரக்தியடைந்த மனைவி, கணவனை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக விஷ மாத்திரைகளை வாங்கி அவருக்கு கொடுத்ததில், சாப்பிட்ட சில நிமிடங்களில் கணவர் உயிரிழந்துள்ளார்.
மனைவி வெறிச்செயல்
பின், தன்னுடைய டியூசனில் படித்த சில சிறுவர்களை அழைத்து, அவர்கள் உதவியுடன் சவுலாசா வனப்பகுதியில் கணவரின் உடலை நிதி தேஷ்முக் வீசியுள்ளார். பின் மறுநாள் சிறுவர்களுடன் மீண்டும் வனப்பகுதிக்கு வந்து பெட்ரோல் ஊற்றி உடலை தீ எரித்துவிட்டுத் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், அந்த சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் மனைவி கணவனை கொலை செய்து காட்டில் வீசிய சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து நிதி தேஷ்முக்கை கைது செய்துள்ளனர். அந்த 3 சிறுவர்களை அழைத்து விசாரித்து வருகின்றனர்.