23 வயதில் 25 ஆண்களை திருமணம் செய்த பெண் - பகீர் பின்னணி
பெண் ஒருவர் 25 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.
திருமண மோசடி
போபாலை சேர்ந்தவர் அனுராதா பாஸ்வான்(23). இவர் ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போது, ஒரு புதிய பெயரை வைத்துக் கொள்வார்.
ஆண்களை ஏமாற்றி திருமண செய்து கொண்டு, சிறந்த மருமகளாக நடித்து, வீட்டில் உள்ளவர்களுக்கு போதை மருந்து கலந்த உணவை கொடுத்து, அவர்களிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் சென்றுவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
மேலும், இதற்காக ஒரு கும்பலே ப்ளான் போட்டு வேலை செய்துள்ளது. திருமணத்திற்காகக் காத்திருக்கும் நபர்களிடம் அந்தக் கும்பலில் உள்ள உறுப்பினர்கள் அவருடைய புகைப்படங்களையும், ப்ரொஃபைலையும் எடுத்துச் செல்வார்கள். திருமண புரோக்கரும் அந்த கும்பலில் உள்ள ஒரு உறுப்பினர் ஆவார்.
சிக்கிய பெண்
திருமண ஏற்பாடு செய்வதாகச் சொல்லி, புரோக்கராக நடித்த நபரும் 2 லட்சம் வாங்குகிறார். இந்நிலையில் இது தொடர்பாக, சவாய் மாதோபூரைச் சேர்ந்த விஷ்ணு சர்மா போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி, போலீஸார் திட்டம் தீட்டி ஒரு கான்ஸ்டபிள் மணமகனாக நடித்துள்ளார். பின் அவர்கள் ஒரு புரோக்கர் மூலம் பாஸ்வானை திருமணம் செய்து கொள்வதாக கூறி, கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஏழு மாதங்களில் 25 வெவ்வேறு ஆண்களை திருமணம் செய்துக்கொண்டு ஏமாற்றியதாக கூறப்படுகிறது.