6 வயது சிறுமியிடம் அத்துமீறல் - கத்தியதால் கழுத்தை நெரித்து கொன்ற தலைமை ஆசிரியர்

Attempted Murder Gujarat Sexual harassment Crime
By Sumathi Sep 24, 2024 01:00 PM GMT
Report

6 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

குஜராத், தாஹோத் பகுதில் பள்ளியின் வளாகம் ஒன்றில் 6 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடனே, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்ததில் சிறுமி மூச்சுத் திணறி இறந்தது தெரியவந்தது.

6 வயது சிறுமியிடம் அத்துமீறல் - கத்தியதால் கழுத்தை நெரித்து கொன்ற தலைமை ஆசிரியர் | Headmaster Rape Killed 6 Year Old Girl Gujarat

தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்த சிறுமி, தினமும் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் கோவிந்த் நாத் உடன் சென்று வந்ததாக சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்தால் இனி மரண தண்டனை - நிறைவேறிய சட்டம்!

பாலியல் வன்கொடுமை செய்தால் இனி மரண தண்டனை - நிறைவேறிய சட்டம்!

சிறுமி கொடூர கொலை

அதன் அடிப்படையில், சம்பவத்தன்று கோவிந்த் செல்போனின் இருப்பிட விவரங்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, தலைமை ஆசிரியர் றுமியை அவரது வீட்டில் இருந்து அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியின் தாயார் அவரை காரில் ஏற்றிவிட்டுள்ளார். பள்ளிக்கு செல்லும் வழியில், கோவிந்த் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

6 வயது சிறுமியிடம் அத்துமீறல் - கத்தியதால் கழுத்தை நெரித்து கொன்ற தலைமை ஆசிரியர் | Headmaster Rape Killed 6 Year Old Girl Gujarat

இதனை எதிர்த்த அந்த சிறுமி கத்த ஆரம்பித்துள்ளார். கத்துவதைத் தடுக்க சிறுமியின் கழுத்தை அவர் நெரித்ததில் அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். பள்ளிக்கு வந்ததும், அவர் சிறுமியின் உடலை காரிலேயே வைத்து வாகனத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

பின், சிறுமியின் உடலை பள்ளி கட்டிடத்தின் பின்னால் வீசிவிட்டு, அவரது பள்ளி பை மற்றும் காலணிகளை வகுப்பறைக்கு வெளியே போட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தலைமை ஆசிரியர் தற்போது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.