மாணவிக்கு பாலியல் தொல்லை..தலைமை ஆசிரியரை உள்ளாடையுடன் உறவினர்கள் செய்த சம்பவம்!

Cuddalore Crime Social Media
By Swetha Aug 08, 2024 08:30 AM GMT
Report

தலைமை ஆசிரியரை உள்ளடையுடன் அடித்து இழுத்த சென்ற சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

தலைமை ஆசிரியர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் அருகே செயல்பட்டு வரும் பள்ளியில் அந்த சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக எடில்பட் பிலிப்ஸ் என்பவர் இருந்த வந்தார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை..தலைமை ஆசிரியரை உள்ளாடையுடன் உறவினர்கள் செய்த சம்பவம்! | Headmaster Caught Red Handed For Abusing Girls

இந்த நிலையில், தலைமை ஆசிரியர் எடில்பட் பிலிப்ஸ் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் அவ்வபோது பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் மாணவிகளுடன் முத்தம் கொடுப்பது,

கட்டி அணைப்பது உள்ளிட்ட புகைப்படங்களை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டு அவ்வபோது அதனை மாணவிகளிடம் காட்டி மிரட்டல் விடுத்து தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கிடையில், தலைமை ஆசிரியரின் செல்போன் தவறுதலாக வேறொருவரின் கையில் சிக்கியதாக சொல்லப்படுகிறது.

இரக்கமின்றி பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை - தேவாலயத்தில் பாதிரியார் செய்த கொடூரம்!

இரக்கமின்றி பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை - தேவாலயத்தில் பாதிரியார் செய்த கொடூரம்!

பாலியல் தொல்லை..

அப்போது அந்த போனை ஆய்வு செய்த நபர் தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் அத்துமீறி நடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த புகைப்படங்களை கிராம இளைஞர்களின் செல்போன் எண்களுக்கு அனுப்பினார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை..தலைமை ஆசிரியரை உள்ளாடையுடன் உறவினர்கள் செய்த சம்பவம்! | Headmaster Caught Red Handed For Abusing Girls

இதனால் தலைமை ஆசிரியர் மீது ஆத்திரமடைந்த கிராம மக்கள் பள்ளி முன்பாக ஒன்று கூடி தலைமை ஆசிரியருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். அந்த சமயத்தில் ஆசிரியர் சற்று ஆணவகமாக பேசியதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை அடித்து ஆடைகளை அவிழ்த்து உள்ளாடையோடு விருத்தாசலம் காவல் நிலையம் நோக்கி அழைத்து வந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஆனால், அதற்குள் ஊர் பொதுமக்கள் தலைமை ஆசிரியரை உள்ளாடையோடு சாலையில் அழைத்து வந்துகொண்டிருந்தனர். பிறகு அங்கு அவர்களிடம் இருந்து தலைமை ஆசிரியரை மீட்ட காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.