ஆசிரியைக்கு பாலியல் வன்கொடுமை- வகுப்பறையில் தலைமை ஆசிரியர் செய்த அதிர்ச்சி சம்பவம்!

Sexual harassment Crime Teachers
By Vidhya Senthil Oct 16, 2024 01:12 PM GMT
Report

பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைக்குத் தலைமை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைமை ஆசிரியர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள பூனைக்குட்டி பள்ளம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளியில் சுப்பிரமணி என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.இவருடன் அந்த பள்ளியில் 7 பெண்கள் உள்பட11ப் பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

sexual harassment

இந்த நிலையில், ஆசிரியை ஒருவரைத் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி அழைத்து, துறை ரீதியான பணியை வழங்கி விரைவாக முடித்துக் கொடுக்க வேண்டும் என கூறி உள்ளார். அதன்படி அந்த ஆசிரியை பணியை முடித்துக் கொடுத்துள்ளார்.

மாணவி தற்கொலை..கையில் கிடைத்த கடிதம் - கான்பூர் ஐ.ஐ.டி.யில் நடந்தது என்ன?

மாணவி தற்கொலை..கையில் கிடைத்த கடிதம் - கான்பூர் ஐ.ஐ.டி.யில் நடந்தது என்ன?

இதனையடுத்து தலைமை ஆசிரியர் சுப்பிரமணி,தனது அறைக்கு அந்த ஆசிரியையை வரவழைத்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.அதிர்ச்சியடைந்த அந்த ஆசிரியை கூச்சலிட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

அந்த அறையை விட்டு வெளியே வந்துள்ளார். தனக்கு நேர்ந்த நடந்த சம்பவம்குறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுந்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

arrest

இந்த தகவலை அறிந்த வட்டார கல்வி அலுவலர் அசோக்குமார் உடனடியாக அந்த பள்ளிக்கு விரைந்து வந்தார். அப்போது பாதிக்கப்பட்ட ஆசிரியையிடம் விசாரணை மேற்கொண்டார்.

அதன் பிறகு இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஜோலார்பேட்டை காவல்துறையினர் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.