பெண் ஆசிரியருடன் தனிமையில் தலைமை ஆசிரியர் - வீடியோ எடுத்து அம்பலபடுத்திய மாணவர்கள்
பள்ளியில் ஆசிரியையுடன் தலைமை ஆசிரியர் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் அட்டகாசம்
ஆந்திரா, மசூலிப்பட்டணம் பகுதியில் அரசு உருதுமொழி உண்டு உறைவிடப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்காள் தங்கி படிக்கின்றனர். இதில், தலைமை ஆசிரியராக இருப்பவர் ஆனந்த் பிரசாத்(48).
இவருடன் ஒப்பந்த ஆசிரியர் ஒருவரும் வேலை செய்து வருகிறார். இந்த பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் தான் என கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனை அறிந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சஸ்பெண்ட்
தொடர்ந்து, பள்ளி முடிந்ததும் தன்னுடைய அறைக்கு ஆசிரியரை அழைத்து சென்ற, தலைமை ஆசிரியர் அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை மாணவர் ஒருவன் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளான். அதனை பார்த்த தலைமை ஆசிரியர் அவனை அழைத்து தாக்கி செல்போனில் உள்ள வீடியோவை டெலிட் செய்துள்ளார்.
ஆனால் அந்த மாணவன் அதற்கு முன்பே அதனை தன் நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளான். அதை அறிந்த ஆசிரியர் அவனை சரமாரியாக தாக்கியுள்ளார். தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் அதை அறிந்த நிலையில் புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மேலும், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அவரை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளனர்.