பீச்சில் இருள் சூழ்ந்த இடத்தில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடி - சுற்றி வளைத்த கும்பல்
சென்னை நீலாங்கரை கடற்கரையில் தனிமையில் இருந்த காதல் ஜோடியை மர்ம கும்பல் ஒன்று சுற்றி வளைத்து சம்பம் செய்துள்ளது.
தனிமையில் இருந்த காதல் ஜோடி
சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள கடற்கரையில் தனது காதலியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அவர்கள் இருள் சூழந்த இடத்தில் அமர்ந்து அன்பை பரிமாரிக்கொண்டு இருந்துள்ளனர். இருவரும் தனியாக இருப்பதை கண்ட 3 பேர் கொண்ட கும்பல் காதல் ஜோடியை சுற்றி வளைத்துள்ளது.
பணம் கொள்ளை
பின்னர் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் வைத்திருந்த செல்போனை பிடுங்கி கூகுள் பே சென்று ஆன்லைன் டிரான்ஸாக்ஷனை பார்த்துள்ளனர். அதில் அவர்களின் அக்கவுண்டடில் ரூ. 40 ஆயிரம் இருந்துள்ளது.
இதையறிந்த அந்த கும்பல் தங்களது போன் பே அக்கவுண்ட்டிற்கு டிரான்ஸ்பர் செய்து கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளது.
இதையடுத்து அந்த இளைஞர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை போலீசார் கத்தி முனையில் ஆன்லைன் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ளையடித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.