10 வயது சிறுமிகளுக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை - வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்!

Sexual harassment Crime Sivagangai
By Sumathi Apr 23, 2024 03:22 AM GMT
Report

4 மற்றும் 5ம் வகுப்பு சிறுமிகளுக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

 பாலியல் தொல்லை

சிவகங்கை, காளையார்கோவில் அருகேயுள்ள பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராக 2015ல் பணியாற்றியவர் முருகன்(62).

murugan

இந்நிலையில் இவர் 4 மற்றும் 5ம் வகுப்பு படித்த ஆறு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் பாட்டி போலீஸில் புகாரளித்தார்.

அதன் அடிப்படையில், போக்சோவின் கீழ் 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ் குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 47 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ₹69 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை - சத்தம் போட்டதால் இளைஞர் வெறிச்செயல்!

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை - சத்தம் போட்டதால் இளைஞர் வெறிச்செயல்!

ஆசிரியர் கொடுமை 

மேலும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 6 சிறுமிகளில் முதல் சிறுமிக்கு ₹7 லட்சம், மற்றொரு சிறுமிக்கு ₹6 லட்சம்,

sexual abuse

மற்ற நான்கு சிறுமிகளுக்கு தலா ₹4 லட்சம் என மொத்தமாக ₹29 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.