சிறுமியின் கன்னத்தில் சூடுவைத்த தலைமை ஆசிரியை - ஆத்திரத்தில் கொடுமை!
மாணவியின் கன்னத்தில் சூடு வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியை கொடுமை
திருவண்னமலை, மணிமங்கலம் கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியை உஷா ராணி மற்றும் ஆசிரியர் என 2 நபர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில், கெடாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முனியன் என்பவரின் மகள் கவுதமி(9) 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வகுப்பில் மாணவி பக்கத்தில் உள்ள மாணவர்களுடன் பேசிக்கொண்டும், சேட்டை செய்துள்ளாராம் மாணவி இதனைக்கண்ட தலைமை ஆசிரியர் உஷாராணி மாணவியை அழைத்து மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
சிறுமி பாதிப்பு
இதனால், தீக்குச்சியை எடுத்து மாணவியை மிரட்டியதில் கண்ணத்தில் தீக்காயமாக பட்டுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியருடம் கேட்டதில் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே, போலீஸில் புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து பள்ளி கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதனையடுத்து, தலைமை ஆசிரியர் உஷாராணியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் உத்திரவிட்டுள்ளார்.