வலியால் கதறிய சிறுமி - கொடுமைப்படுத்தி சூடு வைத்த டாக்டர் தம்பதி!
டாக்டர் தம்பதி வீட்டுக்கு வேலைக்கு சென்று சிறுமிக்கு நடந்த கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் தம்பதி
கேரளா, கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் முகமது கம்பூரான். இவரது மனைவி ரகுமான். இருவரும் மருத்துவர்கள். கோழிக்கோடு அருகே பந்தீர் காவு என்கிற இடத்தில் கிளினிக் நடத்தி வருகிறார்கள்.
இவர்களின் வீட்டு வேலைகளை கவனிப்பதற்காக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியை கடந்த 3 மதங்களுக்கு முன் வேலைக்கு சேர்த்து இருக்கிறார்கள். வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்தே சிறுமியை அடித்து, உதைத்து அதிகம் வேலை வாங்கி வந்திருக்கிறார்கள்.
சிறுமிக்கு கொடுமை
அடி தாங்க முடியாமல் வலியால் சிறுமி அழுவது துடிப்பதை அக்கம் பக்கத்தினர் கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில், சிறுமி சரியாக வேலை செய்யவில்லை என்று சொல்லி சூடு வைத்து கொடுமைப்படுத்தி உள்ள்னர்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கோழிக்கோடு குழந்தைகள் பாதுகாப்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். தொடர்ந்து சம்பவ இஅடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
கைது
அப்போது சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனையடுத்து கணவனும் மனைவியும் இரண்டு பேருமே அந்த சிறுமியை கொடுமைப்படுத்தி வந்தது தெரியவந்தது.
புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன், மனைவி இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.