நீர் பற்றாக்குறை.. தண்ணீர் வண்டியில் திருமண ஊர்வலம் சென்ற தம்பதி! ஹனிமூனும் போகபோவதில்லையாம்...

India Maharashtra Marriage
By Sumathi Jul 10, 2022 04:37 AM GMT
Report

தண்ணீர் பிரச்னை தீரும் வரை நாங்கள் தேன் நிலவு செல்லப்போவதில்லை என்றும், தண்ணீர் வண்டியில் ஊர்வலம் வந்தும் ப்ரச்னையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளனர் .

தண்ணீர் பிரச்னை

இது குறித்து விஷால் கூறுகையில், நாங்கள் பிரின்ஸ் கிளப் என்ற சமூக அமைப்பை நடத்தி வருகிறோம். எங்கள் உள்ளாட்சி நிர்வாகத்திடம் தண்ணீர் பிரச்னையை எத்தனை முறை முறையிட்டும் அதற்கு தீர்வு ஏதும் கிடைக்கவில்லை.

எனவே தான் இந்த அவல நிலையை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்ற நோக்கில் இந்த ஊர்வலத்தை மேற்கொண்டோம் என்றார்.இந்த புதுமையான ஊர்வலம் மட்டும் நிறுத்தி விடாமல், தங்கள் பகுதியில்

புதுமணத் தம்பதி

இந்த தண்ணீர் பிரச்னை தீரும் வரை நாங்கள் தேன் நிலவு செல்லப்போவதில்லை என இந்த தம்பதி முடிவெடுத்துள்ளனர்.இந்த தம்பதி. மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதி தங்கள் பகுதியில் நிலவும்

நீர் பற்றாக்குறை பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்ட, அவர்களின் திருமண ஊர்வலத்தை தண்ணீர் வண்டியின் மீது நடத்தியுள்ளனர். கோலாப்பூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான விஷால் கோலேகருக்கு அபர்ணா என்ற பெண்ணுடன்  திருமணம் நடைபெற்றுள்ளது. 

விடிவுகாலம்

 இந்த பகுதியில் நீண்டகாலமாகவே தண்ணீர் பற்றாக்குறை பிரச்னை இருந்து வருகிறது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் தங்களின் தண்ணீர் தேவைக்காக தண்ணீர் டேங் வண்டிகளையே சார்ந்துள்ளனர்.

இதற்கு விடிவுகாலம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தனது திருமணத்தையே அதற்காக பயன்படுத்தியுள்ளார் விஷால் கோலேகர். பொதுவாக புதுமண தம்பதி தனது திருமண ஊர்வலத்தை காரில் நடத்துவது தான் வழக்கம்.

திருமண ஊர்வலம்

ஆனால், தங்கள் பகுதி சந்தித்து வரும் தண்ணீர் பிரச்சனையை வெளிச்சம் போட்டு காட்ட இவர் தனது மனைவியுடன் தண்ணீர் கொண்டு வரும் வண்டியில் திருமண ஊர்வலம் மேற்கொண்டுள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  

3 முறை கருக்கலைப்பு - திடீர் பல்டி அடித்த நடிகை சாந்தினி!