தண்ணீர் கேட்டவருக்கு சிறுநீர் கொடுத்த போலீஸ் : சிறையில் இளைஞருக்கு நடந்த கொடூமை

bengaluru threecops
By Irumporai Dec 08, 2021 05:41 AM GMT
Report

பெங்களூருவைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் போலீசாரால் சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மூன்று பேர் இடைக்காலப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு பயந்தராயனபுரா சரகத்துக்கு உட்பட்ட வர்த்தூர் பகுதியில் வசிப்பவர் தௌசிஃப் பாஷா (23). இவரது தந்தை அஸ்லாம் பாஷா. பக்கத்து வீட்டாருடன் பிரச்னை ஏற்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இருவரும் நள்ளிரவு ஒரு மணிக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து உள்ளூர் எம்.எல்.ஏ ஒருவரும் பரிந்துரையின் பேரில் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தௌசிஃப் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரம் அவர் போலீசாரால் துன்புறத்தப்பட்டிருப்பது பின்னர் தெரியவந்துள்ளது

தௌசிஃப் குடிக்க தண்ணீர் கேட்டதற்கு அவருக்கு சிறுநீரைக் குடிக்கக் கொடுத்ததாகவும், காவல்நிலையத்தைச் சுத்தம் செய்யச் சொன்னதாகவும், தௌசிஃபின் தாடியைப் போலீசார் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.

தனது தாடி தனது மதநம்பிக்கையின் அடையாளம் என தௌசிஃப் கூறியதற்கு காவல்நிலையத்தில் மதம் எல்லாம் கிடையாது எனப் போலீசார் பதில் அளித்துள்ளனர். பின்னர் காவல்நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட தௌசிஃப் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு வந்து சேர்ந்துள்ளார்.

இதையடுத்து தௌசிஃப்பை துன்புறுத்தியதாகக் கூறப்பட்ட காவல்துறை துணை ஆய்வாளர் ஹரிஷ் மற்றும் கான்ஸ்டபிள்கள் இருவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்தும் இந்தப் புகாரின் மீது விசாரணை செய்யக் கோரியும் பெங்களூரு மெட்ரோ காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பெங்களுரு போலீசாரால் பொதுமக்கள் சித்திரவதை செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது இது மூன்றாவது முறை.

கடந்த மாதம் 22 வயது இளைஞர் ஒருவர் இதே போன்றதொரு புகார் எழுப்பியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் தலித் இளைஞர் ஒருவர் போலீசாரால் இதே போலச் சித்திரவதை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது.

தௌசிஃப் குடிக்க தண்ணீர் கேட்டதற்கு அவருக்கு சிறுநீரைக் குடிக்கக் கொடுத்ததாகவும், காவல்நிலையத்தைச் சுத்தம் செய்யச் சொன்னதாகவும், தௌசிஃபின் தாடியைப் போலீசார் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.

தனது தாடி தனது மதநம்பிக்கையின் அடையாளம் என தௌசிஃப் கூறியதற்கு காவல்நிலையத்தில் மதம் எல்லாம் கிடையாது எனப் போலீசார் பதில் அளித்துள்ளனர்.

பின்னர் காவல்நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட தௌசிஃப் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு வந்து சேர்ந்துள்ளார்.

இதையடுத்து தௌசிஃப்பை துன்புறுத்தியதாகக் கூறப்பட்ட காவல்துறை துணை ஆய்வாளர் ஹரிஷ் மற்றும் கான்ஸ்டபிள்கள் இருவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்தும் இந்தப் புகாரின் மீது விசாரணை செய்யக் கோரியும் பெங்களூரு மெட்ரோ காவல்துறை நடவ்டிக்கை எடுத்துள்ளது.

பெங்களுரு போலீசாரால் பொதுமக்கள் சித்திரவதை செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது இது மூன்றாவது முறை. கடந்த மாதம் 22 வயது இளைஞர் ஒருவர் இதே போன்றதொரு புகார் எழுப்பியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் தலித் இளைஞர் ஒருவர் போலீசாரால் இதே போலச் சித்திரவதை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.