காலையில் போலீஸ் - மாலையில் திருட்டு தொழில்..! காவல் ஆய்வாளரே செயின் பறித்த சம்பவம்..!

Coimbatore Tamil Nadu Police
By Karthick Feb 05, 2024 02:43 AM GMT
Report

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தலைமை காவல் அதிகாரி

திருட்டு சம்பவங்கள் நடைபெற்றால் போலீசாரிடம் முறையிடலாம். ஆனால் அந்த போலீஸ் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டால் - என்ன செய்வது..?

தள்ளுவண்டி கடைகளை அகற்றிய போலீஸ்; முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு - குவியும் பாராட்டு!

தள்ளுவண்டி கடைகளை அகற்றிய போலீஸ்; முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு - குவியும் பாராட்டு!

அப்படி ஒரு சம்பவம் தான், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்துள்ளது. பொள்ளாச்சியை அடுத்த செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனின் தலைமை காவல் அதிகாரியாக இருந்தவர் சபரிகிரி.

head-constable-suspended-for-chain-snatching-kovai

பொள்ளாச்சி பகுதியில் கடந்த 27-ஆம் தேதி அடுத்தடுத்து 2 பெண்களிடம் மர்ம நபர் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், திருடியது சபரிகிரி தான் என்றும், பொள்ளாச்சி மட்டுமென்றி அவர், செட்டிபாளையம் பகுதிகளிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

head-constable-suspended-for-chain-snatching-kovai

கைது செய்யப்பட்ட சபரிகிரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபரிகிரியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டுள்ளார்.