தள்ளுவண்டி கடைகளை அகற்றிய போலீஸ்; முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு - குவியும் பாராட்டு!

India Telangana
By Jiyath Feb 01, 2024 05:57 AM GMT
Report

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் உடனடி நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

உணவகங்கள் 

ஹைதராபாதில் ஐ.டி. நிறுவனங்கள் அதிகம் உள்ள துர்கம் செருவு பகுதியில் தள்ளுவண்டி உணவகங்களில் விடிய விடிய வியாபாரம் நடைபெற்று வருகிறது.

தள்ளுவண்டி கடைகளை அகற்றிய போலீஸ்; முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு - குவியும் பாராட்டு! | Roadside Shops Allowed Again By Telangana Cm

இங்கு சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமான 'குமாரி ஆன்ட்டி' என்பவரின் தள்ளுவண்டி கடை உள்ளது. இவர் சுவையான சைவம் மற்றும் அசைவ உணவுகளை மிகக் குறைந்த விலைக்கு வழங்கி வருகிறார்.

இதனால் பிரபலமான குமாரியின் கடைக்கு அதிக வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். மேலும் பலர், இவரைப்பார்த்து அந்த இடத்தில் தள்ளுவண்டி கடைகளை வைத்ததால், நாளுக்கு நாள் அப்பகுதியில் கூட்டம் அதிகரித்து போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இடைக்கால பட்ஜெட் 2024 - முன்னாள் பிரதமரின் சாதனையை சமன் செய்யும் நிர்மலா சீதாராமன்!

இடைக்கால பட்ஜெட் 2024 - முன்னாள் பிரதமரின் சாதனையை சமன் செய்யும் நிர்மலா சீதாராமன்!

முதல்வர் உத்தரவு 

இந்நிலையில் அங்குள்ள தள்ளுவண்டி கடைகள் அனைத்தையும் நேற்று முன்தினம் போக்குவரத்து போலீஸார் அகற்றினர்.

தள்ளுவண்டி கடைகளை அகற்றிய போலீஸ்; முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு - குவியும் பாராட்டு! | Roadside Shops Allowed Again By Telangana Cm

இதையடுத்து குமாரி ஆன்ட்டி உள்ளிட்ட கடைக்காரர்கள் தங்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லை என கண்ணீர் சிந்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் கடைக்காரர்களின் உடைமைகளை திரும்ப ஒப்படைக்கவும். அதே இடத்தில் அவர்கள் மீண்டும் தள்ளுவண்டி கடைகள் நடத்த அனுமதி அளிக்கவும் போலீசாருக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டார். முதல்வரின் உடனடி நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.