இந்த பிப்ரவரியில் ஒரு நாள் மட்டும் UPI வேலை செய்யாது - எப்போது தெரியுமா?
ஹெச்டிஎஃப்சி வங்கி யுபிஐ தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கி
தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) ஆனது அதன் யுபிஐ சேவை நிறுத்தம் தொடர்பாக ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிஸ்டம் பராமரிப்பு காரணமாக, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதியன்று நள்ளிரவு 12 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரை யுபிஐ சேவைகள் அணுக கிடைக்காது. இது ரூபே கிரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ
மேலும், கோடக் மஹிந்திரா வங்கி 811 சேவிங்ஸ் அக்கவுண்ட்களில், இந்த வங்கியின் கிளைகள் மற்றும் பண வைப்பு இயந்திரங்களின் வழியிலான ரொக்க பரிவர்த்தனை கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளது.
இதன்கீழ் ஒரு மாதத்திற்கான முதல் இலவச பரிவர்த்தனைக்கு பிறகு அல்லது மாதம் ரூ.10,000 டெபாசிட்க்கு பின்னர் அனுப்பப்படும் ரூ.1,000 க்கு ரூ.5 (அதிகபட்சம் ரூ.50) கட்டணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரியர் மூலம் பின் ரீஜெனரேஷன், மூத்த குடிமக்களுக்கு கேஷ் / இன்ஸ்ட்ரூமென்ட் பிக்அப் மற்றும் பேலன்ஸ் ஸ்டேட்மெண்ட்ஸ் போன்ற சில கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.