5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு - EMI குறைகிறதா ?
5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம்
ரெப்போ வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் பெரும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். நேற்று முன்தினம்(05.02.2025) மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்திற்கு ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில், 6.5 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி தற்போது 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
குறையும் EMI
முன்னதாக 2020 ஆம் ஆண்டு மே மாதம் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்ட நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் அதிக கடன் பெற முடியும். இதனால் மக்கள் வங்கியிடமிருந்து கார், வீடு லோன்களை வாங்கியிருந்தால் அதற்கான EMI குறையும் என கூறப்படுகிறது.
இந்தியாவின் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்ற பிறகு முதல் முறையாக ரெப்போ வட்டி குறைக்கப்பட்டுள்ளது.