செய்தியாளர் சந்திப்பு..திடீரென மூக்கில் இருந்து வழிந்த ரத்தம்! மத்திய அமைச்சர் குமாரசாமியின் நிலை என்ன?
ஹெச்.டி.குமாரசாமி
2006-2007 மற்றும் 2018-2019 ஆம் ஆண்டுகளில் கர்நாடகாவின் முதல்வராக இருந்தார் ஹெச்.டி.குமாரசாமி. இவர் முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் மகனாவார். நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார்.
இவருக்கு மத்திய அமைச்சரவையில் இடமளித்துள்ளது பாஜக அரசு. அவருக்கு கனரக தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு ஹோட்டலில் பாஜக - ஜேடிஎஸ் கட்சிகளுகு இடையே நடைபெற்ற கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது, திடீரென அவரின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது.
வழியத் தொடங்கிய ரத்தம், அவரது சட்டை ரத்தத்தில் படிந்திருந்தது பதிவாகியுள்ளது. உடனடியாக அவர் அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.