கும்பாபிஷேகத்தை LIVE செய்ய போலீஸ் அனுமதி தேவையா? - உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!
கும்பிஷேகம் ஒளிபரப்ப இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றவுள்ள நிலையில், நாடே திருவிழா கோலம் பூண்டுள்ளது.
ராமர் கோவில்
மதியம் 12:29 மணிக்கு நாட்டின் பிரதமர் மோடி, ராமர் சிலையை பிராண பிரதிஷ்டை செய்யவுள்ளார். இந்த கும்பாபிஷேகத்தை காண, நாடெங்கிலும் இருந்து பல முக்கிய பிரமுகர்கள் அயோத்திக்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முதல் தமிழ்நாட்டில் அறநிலைய துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக பாஜகவினர் தொடர் குற்றசாட்டுக்கள் எழுப்பிய நிலையில், அதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர் பாபு, இந்த குற்றச்சாட்டுகளுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்தார்.
சென்னை உய்ரநீதிமன்றம் அதிரடி
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், அவசர வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதாவது ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நேரலையில் பல கோவில்களில் இருந்து காண, போலீசார் அனுமதி வேண்டுமா..? என்ற கேள்வி எழுந்தது.
இந்த வழக்கில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்வை தனியார் கோவில்கள், திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போல்சிர் அனுமதி தேவையில்லை என தெரிவித்துள்ளது.