பஜனை பண்ணுங்க, விழா எடுங்க.. யார் தடுப்பாங்கனு பார்ப்போம் - அண்ணாமலை ஆவேசம்!

Tamil nadu BJP K. Annamalai Ayodhya Ayodhya Ram Mandir
By Jiyath Jan 22, 2024 03:54 AM GMT
Report

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

கும்பாபிஷேக விழா 

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது.

பஜனை பண்ணுங்க, விழா எடுங்க.. யார் தடுப்பாங்கனு பார்ப்போம் - அண்ணாமலை ஆவேசம்! | Bjp To Offer Special Pooja Across Temples In Tn

இதற்கிடையில் தமிழ்நாடு முழுக்க உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்த அரசு தடை விதித்து இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதில் உண்மையில்லை என்றும் இதுபோன்ற தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

இந்நிலையில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, தமிழ்நாடு முழுக்க அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தவும், அன்னதானம் வழங்கவும் பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

யார் தடுப்பாங்க..!

இது தொடர்பாக பேசிய அவர் "நாளை அமைதியான முறையில் கோவில்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை தி.மு.க. அரசு தடுக்க நினைப்பதை எந்த காலத்திலும் ஏற்க முடியாது.

பஜனை பண்ணுங்க, விழா எடுங்க.. யார் தடுப்பாங்கனு பார்ப்போம் - அண்ணாமலை ஆவேசம்! | Bjp To Offer Special Pooja Across Temples In Tn

இதனால் பா.ஜ.க.வினர் எல்லா எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜை செய்யுங்கள், அனுமதி தேவையில்லை. அனைத்து கோவில்களிலும் அன்னதானம் கொடுங்கள், திருப்தியாக சாப்பாடு கொடுங்கள், பஜனை பண்ணுங்க, ராமர் கீர்த்தனை பண்ணுங்க. நாளை ஜனவரி 22, ராமர் கோவில் பிரான பிரதிஷ்டையை ஒட்டி கோவில்களில் விழா எடுங்க, யார் தடுப்பாங்கனு பார்ப்போம். இதை தடுத்தால் தான் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்" என்றார்.