பதில் மனு இல்லனா ஏன் வழக்கு தொடருகுறீர்கள்..? செந்தில் பாலாஜி வழக்கு - நீதிமன்றம் அதிருப்தி..!
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை முதன்மை நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணபரிவர்தனையில் சிறைவாசம் அனுபவித்து வரும் இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, பல முறை ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தும் அவரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இவரின் வழக்கு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில், இன்று நீதிமன்ற நீதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
நீதிபதி அதிருப்தி
ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி நீதிபதி அல்லி அமர்வில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது,பதில் மனு தாக்கல் செய்யாமல், அமலாகத்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வர உள்ளதாக கூறி விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது நிதானமிழந்த நீதிபதி அல்லி, ஏற்கனவே இந்த வழக்கில் பதிமனு தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இதுவரை தாக்கல் செய்யவில்லை என்பதை குறிப்பிட்டு, பதில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் எதற்காக வழக்கு தொடருகிறீர்கள் என்று அமலாகத்துறைக்கு கேள்வி எழுப்பினார்.
பின்னர் வழக்கின் விசாரணை சிறிது நேரத்திற்கு பிறகு அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி நாளை ஒத்திவைத்துள்ளார்.