ராமர் பாதத்தை ஊர்வலமாக எடுத்து செல்ல வேண்டும் - நீதிமன்றம் தெரிவித்த அதிரடி உத்தரவு!
திருப்பூரிலிருந்து அயோத்திக்கு ராமர் பாதத்தை ஊர்வலமாக எடுத்துச் செல்ல தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமர் கோவில்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் (Ayodhya ram) கும்பாபிஷேக விழாகடந்த ஆண்டு 2023 ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற்றது.இந்த கோவில் 2,000 கோடி மதிப்பில் 70 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டது.
இந்த கோவிலின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கருவறையில் பால ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிலையில் அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதைக் கொண்டாடும் விதமாக,
திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையத்தில் உள்ள கருப்பராயன் கோவிலில் ராமர் பாதங்களை வைத்து பூஜை செய்யவும் வாகன ஊர்வலம் நடத்தவும் அகில பாரத இந்து மகாசபாவின் திருப்பூர் மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் திட்டமிடப்பட்டுள்ளது.
அனுமதி மறுப்பு
இதற்காக ஊர்வலத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது . அப்போது காவல் துறை தரப்பில், மனுதாரர் ஏற்கனவே அரசியல் உள்நோக்கத்தோடு இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
ஏற்கனவே அவர் இந்து முன்னணி அமைப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதியின்றி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தது தொடர்பான வழக்கு உள்ளது என்பதால் இந்த விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் காவல்துறை தரப்பின் வாதத்தை ஏற்ற நீதிபதி, ராமர் பாதம் கொண்டு செல்லும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது கூறி உத்தரவிட்டார்.