பள்ளியின் புகழுக்காக நரபலி - 2ஆம் வகுப்பு மாணவனை கொன்ற பள்ளி நிர்வாகம்

Uttar Pradesh
By Karthikraja Sep 27, 2024 07:59 AM GMT
Report

பள்ளிக்கு புகழ் கிடைக்கவேண்டுமென்று 2 ஆம் வகுப்பு மாணவன் நரபலி கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2ஆம் வகுப்பு மாணவன்

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் டிஎல் பப்ளிக் என்ற குடியிருப்பு பள்ளி இயங்கி வருகிறது. டெல்லியில் மென்பொருள் பொறியாளராக பணி புரியும் ஸ்ரீ கிருஷ்ணாவின் ஒரே மகனான கிருதார்த் இந்த பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

hathras dl public school

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை, இரண்டாவது மாடியில் அமைந்துள்ள விடுதியில் இருந்து அனைத்து குழந்தைகளையும் யோகா ஆசிரியர் அழைத்துள்ளார். கிருதார்த் வராததால் அவனது அறைக்கு சென்று பார்த்த போது படுக்கையில் பிணமாக கிடந்ததுள்ளான். 

பள்ளியில் வைத்தே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - விஷயம் தெரிந்து ஆசிரியர்கள் செய்த கொடூரம்

பள்ளியில் வைத்தே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - விஷயம் தெரிந்து ஆசிரியர்கள் செய்த கொடூரம்

நரபலி

இது குறித்து மாணவனின் பெற்றோருக்கு உடல் நிலை சரியில்லை என பள்ளியில் இருந்த ஒருவர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி இயக்குனர் தினேஷ் பாகேலிடம் தகவல் தெரிவித்த போது, அவர் இந்த சம்பவத்தை மறைக்க முயன்று மாணவனின் சடலத்தை தனது காரில் ஏற்றி அந்த பகுதியில் சுற்றியுள்ளார்.

உடனடியாக விரைந்து வந்த மாணவனின் உறவினர்கள் அந்த காரில் சிறுவன் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆத்திரமடைந்த உறவினர்கள் காரை சேதப்படுத்தினர். 

hathras dl public school

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை பள்ளி இயக்குநர் தினேஷ் பாகலை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பள்ளியின் புகழ் மற்றும் வெற்றிக்காக சிறுவனை நரபலி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைது

இது தொடர்பாக மேலும் 3 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி இயக்குநரின் தந்தை ஆகியோரை கைது செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவன் கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாக அறிக்கை வந்துள்ளது. 

hathras dl public school

ஏற்கனவே இது போன்று ஒரு மாணவனை கழுத்தை நெரித்து பலி கொடுக்க முயன்றதாகவும் அந்த திட்டம் தோல்வியில் முடிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.