50 பெண்களுடன் திருமணம் - முதலிரவுக்குப் பின் ஓட்டம் பிடிக்கும் மோசடி மன்னன்!
50 பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
50 திருமணம்
ஜார்கண்ட், ஜாம்ஷெட்பூர் பகுதியை சேர்ந்தவர் தபேஷ் குமார் பட்டாசார்யா(55). 1992இல் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தை இருந்த நிலையில், 8 ஆண்டுகளில் தபேஷ் தலைமறைவாகியுள்ளார்.

பின், பெங்களுருவுக்கு சென்று Smart Hire Solution எனும் வேலைவாய்ப்பு நிறுவனத்தை தொடங்கினார். அங்கு வேலை தருவதாக பல ஆண், பெண்களை ஏமாற்றியுள்ளார்.
மோசடி
தொடர்ந்து, ஷாதி மேட்டரிமோனி இணையதளம் மூலம் விவகரத்து ஆன பெண்கள், கணவரை இழந்த பெண்கள், ஏற்கனவே திருமணமான பெண்களை குறிவைத்து தனது வலையில் வீழ்த்தியுள்ளார்
. கடந்த 20 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். முதலிரவுக்குப் பின் அவர்களிடம் இருந்து பணம், நகைகள் போன்றவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பித்துள்ளார்.
இந்த பெண்களில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள் மற்றும் பல படித்த பெண்கள் உள்ளனர்.
அதனையடுத்து இதில் பல பெண்கள் புகாரளித்த நிலையில், தபேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.