50 வயது பெண்ணை கற்பழித்த 17 வயது சிறுவன் - கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் பகுதியில் வசித்து வந்த 50 வயது பெண் ஒருவர் தன்னுடைய வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். இதனை நோட்டமிட்டு வந்த 17 வயது சிறுவன் ஒருவன் அப்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளான்.
இதனையடுத்து, அப்பெண் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினர் கூட்டி விடக்கூடாது என்பதற்காக அருகில் இருந்த சுத்தியலால் அப்பெண்ணின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறான்.
இதனால் அப்பெண் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து, அந்தச் சிறுவன் அப்பெண்ணை கற்பழித்து விட்டு, வீட்டில் இருந்த 2 செல்போன்களை திருடிவிட்டு வேகமாக தப்பி ஓடி விட்டான்.
சிறுவன் வீட்டிலிருந்து ஓடுவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இத்தகவலை அறிந்ததும் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அப்பெண்ணை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
சிகிச்சையின் போதுதான் அந்தப் பெண் கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அச்சிறுவனை தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர். இதனையடுத்து, அருகில் உள்ள சிறுவர்கள் காப்பகத்தில் அச்சிறுவன் ஒப்படைக்கப்பட்டிருக்கிறான்.