தேர்தல் நெருக்கடி - கூண்டோடு ராஜினாமா செய்த பாஜக முதல்வர் - அமைச்சர்கள்..?
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் உட்பட அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
கூட்டணி
ஹரியானா மாநிலத்தில் இருக்கும் 90 சட்டமன்ற இடங்களுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 40 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும் பெற்றன.
ஆட்சி அமைக்க தேவைப்படும் 46 இடங்களை எந்த கட்சியை பெறவில்லை. தேர்தலுக்கு பிறகு மாநில கட்சியான ஜனநாயக் ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது பாஜக. பாஜக 40 + ஜனநாயக் ஜனதா கட்சி 10 என மொத்தமாக 50 இடங்களை பெற்று பாஜகவின் மனோகர் லால் கட்டர் முதல்வராகவும், ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதலா துணை முதல்வராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் வரும் மக்களவை தேர்தலில் இருகட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்து விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஏதும் வெளிவராத நிலையில், இன்று ஹரியானாவின் முதல்வர் மனோகர் லால் கட்டர் தனது ராஜினாமாவை அம்மாநில ஆளுநரிடம் அளித்துள்ளார்.
அவருடன் சேர்ந்து அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். கூட்டணி விரிசல் காரணமாக கூறப்பட்டாலும், தற்போது அடுத்த முதல்வருக்கான தேர்வில் பாஜகவின் எம்.எல்.ஏ'க்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே போல, வரும் மக்களவை தேர்தலில் மனோகர் லால் கட்டரை போட்டியிட வைக்க பாஜக தலைமை விரும்பியதன் காரணமாக, அவர் ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளன.