சிஏஏ சட்டம் அமல்: 'இரக்கமுள்ள தலைமை' - பிரதமர் மோடிக்கு அமெரிக்க பாடகி பாராட்டு!

BJP Narendra Modi India
By Jiyath Mar 12, 2024 06:23 AM GMT
Report

குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தியதற்கு, பிரதமர் மோடியை அமெரிக்க பாடகியும், நடிகையுமான மேரி மில்பென் பாராட்டியுள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்த நிலையில், 4 ஆண்டுகள் கடந்து தற்போது நாடு முழுவதும் சிஏஏ அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சிஏஏ சட்டம் அமல்:

இந்த சட்டம், 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து மத துன்புறுத்தலால் இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாத இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் ஆகியோர் குடியுரிமை பெற வழிவகை செய்கிறது.

மோடிக்கு பாராட்டு 

இந்நிலையில் அமெரிக்க பாடகியும், நடிகையுமான மேரி மில்பென், பிரதமர் மோடியை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது "இந்தியக் குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மோடி தலைமையிலான அரசாங்கம் இன்று அறிவித்துள்ளதை நான் பாராட்டுகிறேன்.

சிஏஏ சட்டம் அமல்:

பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் இந்திய அரசாங்கத்தின் இரக்கமுள்ள தலைமைக்காகவும், மிக முக்கியமாக துன்புறுத்தப்பட்டவர்களை வரவேற்பதில் மத சுதந்திரத்தை நிலைநிறுத்தியதற்காகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.