ஒரே தப்பு தான்..பாலியல் குற்றவாளிகளை விடவும் இளம்பெண்ணுக்கு அதிக தண்டனை!

Sexual harassment Germany World
By Swetha Jun 30, 2024 06:12 AM GMT
Report

20 வயது பெண்ணுக்கு பாலியல் குற்றவாளிகளை விட நீதிமன்றம் அதிக தண்டனை வழங்கியுள்ளது.

ஒரே தப்பு தான்..

கடந்த 2020 ஆண்டு ஜெர்மனி, ஹாம்பர்க்கில் உள்ள ஒரு பூங்காவில் 15 வயது சிறுமியை ஒரு கும்பல் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இது தொடர்பாக நடத்திய விசாரணையில்,9 பேர் கொண்ட அந்த கும்பல்

ஒரே தப்பு தான்..பாலியல் குற்றவாளிகளை விடவும் இளம்பெண்ணுக்கு அதிக தண்டனை! | Harsher Punishment Than A Rapist For Women

ஹாம்பர்க் ஸ்டாட்பார்க்கில் நடந்த திருவிழாவின் போது அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை டிஎன்ஏ ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது. பின்னர் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தை செய்த 9 பேரில், 8 குற்றவாளிகள் 16 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

எனவே அவர்களுக்கு எந்த சிறை தண்டனையும் அனுபவிக்காமல் வெறும் விசாரணைக்கு மட்டுமே உட்படுத்தப்பட்டனர். ஆனால், அவர்களில் 19 வயதுடைய ஒருவருக்கு 2 ஆண்டுகள் 8 மாதம் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது. மீதமுள்ளவர்கள் எளிதாக, இந்த வழக்கிலிருந்து வெறும் ஆறு மாத தண்டனையுடன் தப்பித்தனர்.

இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனால் ஆன்லைனில் அவர்கள் மீதான வெறுப்பு அதிகரித்தது.எனவே பலரும் அவர்களுக்கு கடுமையான மெசேஜ்களை அனுப்பி திட்டி தீர்த்துள்ளனர். அதில் ஒருவர் தான் இந்த 20 வயதுடைய பெண்.

இதெல்லாம் அநியாயம் .. இந்த தண்டனை அதிகம் : ராகுலுக்கு ஆதரவாக பேசும் பிரசாந்த் கிஷோர்

இதெல்லாம் அநியாயம் .. இந்த தண்டனை அதிகம் : ராகுலுக்கு ஆதரவாக பேசும் பிரசாந்த் கிஷோர்

அதிக தண்டனை

இந்த நிலையில் இவர் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளை 'dishonorable rapist pig' மற்றும் 'disgusting freak' என ஆக்ரோஷமாக விமர்சித்திருந்தார். அதோடு அதோடு சிறு மீதான வன்கொடுமை சம்பவத்தால் தான் மிகவும் திகிலடைந்ததாகக் கூறினார்.

ஒரே தப்பு தான்..பாலியல் குற்றவாளிகளை விடவும் இளம்பெண்ணுக்கு அதிக தண்டனை! | Harsher Punishment Than A Rapist For Women

இதன் காரணமாக நீதிபதிகள் அந்த பெண்ணை ஒரு வெறுப்புக் குற்றத்தில் குற்றவாளி என அறிவித்து, சிறார் காவலில் 48 மணிநேரம் சிறைத்தண்டனை விதித்தனர். இந்த விசாரணையும், பெண்ணின் தண்டனையும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன் , நீதிபதியின் முடிவையும் அவர்கள் அவதூறாகப் பேசினர்.

மேலும் மிக கொடூரமான செயலை செய்த மோசமான குற்றவாளிகள் மிக எளிதாக தப்பிக்கும் போது அதற்காக கோபத்தை வெளிப்படுத்திய பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்பட்டது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.