வேற்று கிரகத்தினவர்களுக்கா இந்திய அணி? இந்த கெய்க்வாட்'டிற்கு வாய்ப்பு வழங்கணும் ! முன்னாள் வீரர் வலியுறுத்தல்
இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் வழங்குவது தொடர்பாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ருதுராஜ் கெய்க்வாட்
ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது consistency'ஐ வெளிப்படுத்தி வருகிறார் ருதுராஜ் கெய்க்வாட். சென்னை அணிக்கு கேப்டனாக இருக்கும் அவருக்கு இந்திய அணியில் பெரிதாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை .
2021-ஆம் ஆண்டு அவர் தேசிய அணியில் இடம் பெற்றார். அப்போதிலிருந்து 2024 வரை 6 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். அதே போல கிட்டத்தட்ட 4 வருடத்தில் விளையாடியுள்ள டி20 போட்டிகள் 23 மட்டுமே.
வேறு கிரகத்தை...
கடைசியாக ருதுராஜ் கெய்க்வாட், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்று 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினர். அப்போதும் தனது consistency'ஐ அவர் வெளியிட்டுள்ளார்.

புகழும் அதிகாரமும் விராட்டை மாற்றிவிட்டது - நாங்கள் பேசுவதையே நிறுத்திவிட்டோம்!! முன்னாள் இந்திய வீரர் வருத்தம்
ஒரு போட்டியில் 77 ரன்னும், மற்றுமொரு போட்டியில் 49 ரன்னும் எடுத்திருந்தார். இந்த நிலையில் அவரை குறித்து பேசிய பிரபல கிரிக்கெட் ஹர்ஷா போக்லே, நீங்கள் எங்கிருந்தோ வந்து ஒரு போட்டியை பார்க்கிறீர்கள் என்றால்,
ருதுராஜ் கெய்க்வாட் தனது கடைசி 3-4 போட்டிகளில் பேட்டிங் செய்வதைப் பார்த்து, அவர் அணியில் இடம் பெறவில்லை என்றால், இந்திய அணி வேறு கிரகத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்று நீங்கள் கூறுவீர்கள். அடுத்த சூப்பர் ஸ்டார் அவர்தான் என புகழாரம் சூட்டியுள்ளார்.