புகழும் அதிகாரமும் விராட்டை மாற்றிவிட்டது - நாங்கள் பேசுவதையே நிறுத்திவிட்டோம்!! முன்னாள் இந்திய வீரர் வருத்தம்
இந்திய அணி டி20 கோப்பையை வென்றது அடுத்து சீனியர் வீரர்களான விராட் மற்றும் ரோகித் சற்று ஓய்வில் உள்ளார்.
ஓய்வு
2007-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி டி20 கோப்பையை வென்று அசத்தியுள்ளது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி. கோப்பையை வென்றவுடனே ரோகித் - விராட் - ஜடேஜா ஆகியோர் டி20 ஃபார்மட்டில் இருந்து தங்களது ஓய்வை அறிவித்து விட்டார்கள்.
அவர்கள் தற்போது vacation'இல் இருக்கிறார்கள். நட்சத்திர வீரர்களான இவர்களையோ குறித்து, பல முன்னாள் வீரர்களும் அவ்வப்போது பேட்டிகளை அளித்து வருகிறார்கள். அப்படி தான், இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
மாறிவிட்டார்...
அப்படி அவர் ரோகித் விராட் குறித்து பேசியது வருமாறு, நான் கிரிக்கெட் வீரராக கோலி - ரோகித்தை மதிக்கிறேன். இருப்பினும், முன்பு எப்படி விராட்டுடன் பழகி இருந்தேனோ அவ்வாறு தற்போதில்லை.
கோலியின் இயல்பும், ரோகித்தின் இயல்பும் நிறைய வித்தியாசமானது. ஐபிஎல் தொடர்கள் அல்லது வேறேதேனும் நிகழ்ச்சியில் சந்தித்தால், ரோகித் சர்மா ஒரே மாதிரியாக நடந்து கொள்கிறார்.
எதாவது நினைப்பாரா என யோசித்து ரோகித் சர்மாவிடம் பேச வேண்டியது இல்லை அவசிமாயில்லை. ஆனால், விராட் நிறைய மாறியிருப்பதை நான் உணர்கிறேன். பேசுவதையே பெரும்பாலும் நாங்கள் நிறுத்திவிட்டோம்.
கோலியை 14 வயதில் இருந்தே எனக்கு தெரியும். புகழ், அதிகாரம் வந்துவிட்டால் பிறர் தங்களை எதோ ஒரு காரணத்திற்காக மட்டுமே அணுகுகிறார்கள் என நினைத்து விடுகிறார்கள். எனக்கு தெரிந்த விராட்டிற்கும் கேப்டன் விராட் கோலிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
இவ்வாறு அமித் மிஸ்ரா பேசினார்.

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
