இளவரசர் ஹரியின் மனைவி மேகன் கூறிய பொய்கள்! ஆதாரத்துடன் அம்பலமான உண்மைகள்

fact prince meghan harry
By Jon Mar 09, 2021 12:57 PM GMT
Report

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் ஓபரா வின்ஃப்ரேக்கு அளித்த பேட்டியால் அரண்மனை இதயத்தில் குத்தப்பட்டதுபோல் வேதனையில் துடிக்கிறது. அத்தனை புகார்களை வாய் கூசாமல் மேகன் கூறியிருக்கிறார். ஆனால், அவற்றில் உண்மை இருக்கிறதா? இதோ ஒரு அலசல்...

1. ஹரியுடனான திருமணத்துக்கு முன், ஹரியைக் குறித்து நான் கூகுளில் தேடவில்லை தனது பேட்டியில், ஹரியுடனான திருமணத்துக்கு முன், ஹரியைக் குறித்தோ, ராஜ குடும்பத்தைக் குறித்தோ, தான் கூகுளில் தேடவில்லை என்று கூறியிருந்தார் மேகன். ஆனால், ஹரி மேகன் தம்பதிக்கு நெருக்கமான நண்பர்கள் எழுதிய அவர்களது வாழ்க்கை வரலாறு புத்தகத்தில், ஹரியும் மேகனும் தாங்கள் சந்தித்துக்கொள்வதற்கு முன்பு, ஒருவரைக் குறித்து மற்றொருவர் அறிந்துகொள்வதற்காக கூகுளில் தேடினார்கள் (வீட்டுப்பாடம் செய்தார்கள்) என எழுதியிருக்கிறார்கள்.

2. அதிகாரப்பூர்வ திருமணத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பே நாங்கள் திருமணம் செய்துகொண்டோம் என்று கூறியுள்ளார் மேகன். இங்கிலாந்து சபையைப் பொருத்தவரை, ஒரு திருமணத்துக்கு இரண்டு பேர் சாட்சியாக வேண்டும். அதை ஆர்ச் பிஷப் நடத்திவைத்திருந்தாரானால், மீண்டும் அவர்கள் தேவாலயத்தில் திருமணம் செய்தபோது அவர் ஏன் அவர்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்கிறார்கள் என கேள்வி எழுப்பவேண்டும். ஆக, அவர்கள் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை.

இளவரசர் ஹரியின் மனைவி மேகன் கூறிய பொய்கள்! ஆதாரத்துடன் அம்பலமான உண்மைகள் | Harry Meghan Prince Exposed Evidence Fact

3. இளவரசனாகும் பிறப்புரிமை ஹரியின் மகன் ஆர்ச்சிக்கு உள்ளது கலப்பினக் குழந்தையாக பிறந்ததால் ஆர்ச்சி இளவரசனாகும் பிறப்புரிமையை யாரும் பறிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் மேகன். ஆனால், சார்லஸின் மூத்த மகனான வில்லியமுடைய மகனான ஜார்ஜ்க்கு மட்டுமே இளவரசராகும் பிறப்புரிமை உள்ளது. அத்துடன், ஆர்ச்சி இளவரசர் ஆகாமலே இருக்கப்போவதும் இல்லை, அவரது தாத்தாவான இளவரசர் சார்லஸ் என்றைக்கு மன்னராவாரோ, அன்று ஆர்ச்சியும் இளவரசர் என அழைக்கப்படுவார் என்பதுதான் உண்மை.

4. தன் மகன் ஆர்ச்சி இளவரசன் இல்லை என்பதால், அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார் மேகன் ஆனால், உண்மையில் ஒருவர் இளவரசராகவோ இளவரசியாகவோ இருப்பதால் மட்டுமே அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதில்லை. உதாரணமாக இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனிக்கு மக்கள் வரிப்பணத்தில் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. ஏன், ஹரி மேகனுக்கே அரசு வழங்கும் பாதுகாப்பு இல்லையே!

  இளவரசர் ஹரியின் மனைவி மேகன் கூறிய பொய்கள்! ஆதாரத்துடன் அம்பலமான உண்மைகள் | Harry Meghan Prince Exposed Evidence Fact

5. திருமணத்துக்கு முன்பே இளவரசி கேட் தன்னை அழவைத்ததாக குற்றம் சாட்டியிருந்தார் மேகன் ஆனால் உண்மை என்னவென்றால், மேகன் திருமணத்தின்போது, கேட்டின் மகள் இளவரசி சார்லட்டின் உடை பொருத்தமானது அல்ல என்று கூறி அவருக்கு பதிலாக வேறொரு குழந்தை தேர்வு செய்யப்பட்டதால், அப்போதுதான் குழந்தை பெற்றிருந்த கேட் அழும் சூழலை மேகன்தான் உருவாக்கியிருக்கிறார்.

6. தனது பாஸ்போர்ட், கார் சாவி மற்றும் ஓட்டுநர் உரிமத்தை அரண்மனை ஊழியர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என தன்னிடம் கூறப்பட்டதாக மேகன் பேட்டியில் தெரிவித்திருந்தார். உண்மையில், மகாராணியார் முதல் இளவரசி கேட் வரை எல்லோருமே தானே கார் ஓட்டிச் செல்வதை நாமே புகைப்படங்களில் பார்த்திருக்கிறோம்.

ஆக, மேகனின் அந்த குற்றச்சாட்டிலும் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. இப்படி சுமார் 13 குற்றச்சாட்டுகளை ராஜ குடும்பத்தின் மீது கூறியிருக்கிறார் மேகன். ஆனால், உண்மைகளை ஆராய்ந்ததில், அவை ஒன்று கூட உண்மை இல்லை என தெரியவந்துள்ளது. இதற்கிடையில், பேட்டியைப் பார்த்த பிரித்தானியர்களும் இதையேதான் உணர்கிறார்கள் என்பதால், மேகன் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டதுபோல்தான் தெரிகிறது.

  இளவரசர் ஹரியின் மனைவி மேகன் கூறிய பொய்கள்! ஆதாரத்துடன் அம்பலமான உண்மைகள் | Harry Meghan Prince Exposed Evidence Fact