ஹாரி-மேகன் தம்பதியை காரில் துரத்திய புகைப்படக் கலைஞர்கள் - டயானாவுக்கும் இதுதான் நடந்தது!

Prince Harry Meghan Markle New York
By Sumathi May 18, 2023 05:34 AM GMT
Report

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியை புகைப்படக்கலைஞர்கள் காரில் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாரி-மேகன் 

பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்குப் பல நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்துகொண்டனர்.

ஹாரி-மேகன் தம்பதியை காரில் துரத்திய புகைப்படக் கலைஞர்கள் - டயானாவுக்கும் இதுதான் நடந்தது! | Harry And Meghan Car Chased By Photographers

தொடர்ந்து, நியூயார்க் நகரில் நடைபெற்ற அறக்கட்டளை விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டனர். அப்போது, அவர்களை புகைப்பட கலைஞர்கள் சூழ்ந்து கொண்டு, புகைப்படம் எடுக்கத் துரத்தியுள்ளனர்.

பரபரப்பு

இதனால், ஹாரி மற்றும் மேகன் தம்பதி காரை நிறுத்தாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. புகைப்படக்கலைஞர்கள் ஹாரி மற்றும் மேகன் தம்பதியை சுமார் 2 மணி நேரம் காரில் துரத்தியதாக புகார் எழுந்துள்ளது.

ஹாரி-மேகன் தம்பதியை காரில் துரத்திய புகைப்படக் கலைஞர்கள் - டயானாவுக்கும் இதுதான் நடந்தது! | Harry And Meghan Car Chased By Photographers

முன்னதாக, 1997 ஆம் ஆண்டு ஹாரியின் தாயார் டயானாவை புகைப்படக்கலைஞர்கள் புகைப்படம் எடுக்க காரை துரத்தியபோது, அவர் விபத்தில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.