தோனிக்கு பந்துவீசியதுலாம் சாதாரணமாக தான் தெரிஞ்சுது - சிஎஸ்கேவை அதிரவிட்ட ஹார்பிரித்!

Sumathi
in கிரிக்கெட்Report this article
தோனிக்கு பந்துவீசியது சாதாரணமாக தான் தெரிந்தது என ஹார்பிரித் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே தோல்வி
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் அபாரமாக ஆடினர்.
இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து ஐந்து முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது. குறிப்பாக, பஞ்சாப் அணியின் ஹர்பிரித் பிரார் 4 ஓவர் வீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார்.
ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஹர்பிரித், நான் ஐபிஎல் தொடரில் கடந்த ஆறு ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். இதன் மூலம் என்னுடைய நம்பிக்கையும் உத்வேகமும் அதிகரித்து இருக்கிறது. தற்போது எல்லாம் தோனி போன்ற ஜாம்பவானுக்கு எதிராக பந்து வீசும் போது நான் சாதாரணமாக தான் உணர்கின்றேன்.
ஹார்பிரித் பேச்சு
எனக்கு எந்த பதற்றமும் ஏற்படுவதில்லை. நான் என்னுடைய பலத்தை நோக்கி பந்து வீசவேண்டும் என்று நினைக்கின்றேன். அதனால் தான் எனக்கு விக்கெட் விழுகிறது என்று நினைக்கின்றேன். நான் நேற்றைய ஆட்டத்தில் விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்று செயல்படவே இல்லை.
என்னுடைய ஒரே குறிக்கோள் அதிக டாட் பால்களை வீசி நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்பது தான். ஏனென்றால் டாட் பால் வீசும் போது நமக்கு விக்கெட் எடுக்க வாய்ப்பு கிடைக்கும்.
ஆடுகளத்தில் சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினால் நிச்சயம் விக்கெட்டுகள் கிடைக்கும் என்று நிலை இருக்கும்போது, எங்களுடைய நம்பிக்கை தானாக உயரும் எனத் தெரிவித்துள்ளார்.