ஆர்கானிக் நாப்கின்களால் புற்றுநோய் அபாயம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Delhi
By Sumathi Nov 24, 2022 08:25 AM GMT
Report

சானிட்டரி நாப்கின்கள் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்களை கொண்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாப்கின்

புதுடெல்லியைச் சேர்ந்த, சர்வதேச மாசு ஒழிப்பு நெட்வொர்க்குடன் தொடர்புடைய Toxics Link என்ற நிறுவனம், அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 10 சானிட்டரி நாப்கின் சாம்பிள்களில் 6 கனிமமற்ற மற்றும் 4 கனிமங்கள் நிறைந்த நாப்கின்களில் ரசாயனங்கள் இருந்தது உறுதியாகியுள்ளது.

ஆர்கானிக் நாப்கின்களால் புற்றுநோய் அபாயம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! | Harmful Chemicals Found In Sanitary Napkins

இதுதொடர்பாக, பென்சுரல் வேஸ்ட் 2022 என்ற பெயரில் அறிக்கை வெளிவந்துள்ளது. இதில் phathalates உடலில் சேர்கையில், நாளமில்லா சுரப்பிகளை சீரற்று போகச்செய்வது, இதயம் மற்றும் இனப்பெருக்க செயல்பாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவது, சில புற்றுநோய்கள், பிறவிக்குறைபாடுகள் போன்றவை உண்டாக வழிவகுக்கிறது.

புற்றுநோய் அபாயம்

இவற்றில் phathalates எனப்படுவது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நாப்கின் என்பவைகளில்தான் அதிகமிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வி.ஓ.சியும் இதில்தான் அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஆர்கானிக் நாப்கின்களால் புற்றுநோய் அபாயம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! | Harmful Chemicals Found In Sanitary Napkins

இது ஆர்கானிக் நாப்கின் மேல் உள்ள நம்பிக்கையை முற்றிலும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் பெண்கள், சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தி வரும் நிலையில்,

அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்களால் உயிருக்கே ஆபத்து என்ற ஆய்வு முடிவுகள், பெண்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.