மேடையில் பாடிய பாடகர் ஹரிஹரன்.. அடையாளம் தெரியாமல் குழம்பிய மக்கள் - என்ன ஆயிற்று?

Swetha
in பிரபலங்கள்Report this article
ஆள் அடையாளம் தெரியாமல் பாடகர் ஹரிஹரன் மாரியது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரிஹரன்..
பாடகர் ஹரிஹரன் தமிழில் மட்டுமின்றி ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி, சிங்களம், மைதிலி, போஜ்புரி, ஒடியா, பெங்காலி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் பாடி பிரபலம் அடைந்தவர்.
அவர் பாடிய பாடல்களும் அந்த இனிமையான குரலையுல் கொண்டாட ஒரு தனி ரசிகர்கள் பட்டளமே உள்ளது. அத்தகைய பிரபலமான பின்னணிப் பாடகர் ஹரிஹரன் சற்று காலம் பெரியளவில் வெளியில் எங்கும் தலைகாட்டாமல் இசைத்துறையில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
என்ன ஆயிற்று?
இந்த நிலையில், கேரளாவில் அண்மையில் நடந்த இசை நிகழ்ச்சியில் பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்த ஹரிஹரன் மிகுந்த வயதான தோற்றத்துடன் உடல் நிலை குன்றிய நிலையில் காணப்பட்டார். பார்ப்பவர்களுக்கு அடையாளமே தெரியவில்லை.
மேடையை நோக்கி அருண் என்று அவர் செல்ல முயன்றப்போது காவல் துறையினர், அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் கண்ணீர்விட்ட ஹரிகரன், மேடையில் ஏறியதும் காதலுக்கு மரியாதை படத்தில் அவர் பாடிய ‘என்னைத் தாலாட்ட வருவாளா’ என்னும் பாடலை பாடியதும்,
ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர். இதனிடையே அவரது உடல் நிலைக்கு என்னதான் ஆச்சு என குழப்பதிலும் சோகத்திலும் இருந்த ரசிகர்களுக்கு, தான் பிராங்க் செய்ததாக தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.