அனுமதி இலவசம் - யாழில் ஹரிஹரன் நடத்தும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி!

Jaffna Hariharan
By Sumathi Oct 16, 2023 05:33 AM GMT
Report

யாழில் ஹரிஹரன் நடத்தும், பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இசை நிகழ்ச்சி

NORTHERN UNIஇன் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி வரும் டிசம்பர் 21ல் யாழ்ப்பாணம் முத்தவெளி அரங்கில் நடைபெறவுள்ளது.

அனுமதி இலவசம் - யாழில் ஹரிஹரன் நடத்தும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி! | Hariharan Live Concert In Jaffna

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர், இசை நிகழ்ச்சி தொடர்பான தகவல்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி முற்றிலும் ரசிகர்களுக்கு இலவசமாக நடத்தப்படவுள்ளது.

அனுமதி இலவசம்

இதற்கான நுழைவுச் சீட்டுகள் எதிர்வரும் நாட்களில் வழங்கப்படும் என ஏற்பாடுக் குழு தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும், Magic group யாழ் வருகையை பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு,

அனுமதி இலவசம் - யாழில் ஹரிஹரன் நடத்தும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி! | Hariharan Live Concert In Jaffna

இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சியை ஹரிஹரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.