34 மாதங்களுக்குப் பின்.. மொத்த நகையையும் தூக்கிய போலீஸ் - ஹரி நாடாருக்கு ஜாமீன்!
ஹரி நாடாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஹரி நாடார்
திருநெல்வேலி, இலந்தைக்குளத்தைச் சேர்ந்தவர் ஹரி நாடார். இவர் சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். உடல் முழுவதும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து கொண்டு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்.
ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப்படை கட்சியில் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட இவர், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது அதிக வாக்குகள் பெற்று 3ஆம் இடம் பிடித்தார். இந்நிலையில், சுமார் 16 கோடி பண மோசடி வழக்கில் அவரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
நகைகள் பறிமுதல்
அதன்பின், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, பல மாதங்களாக ஜாமீன் கிடைக்காமல் இருந்தது. தற்போது, மீண்டும் ஜாமீன் கோரி ஹரி நாடார் மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றம் 34 மாதங்களாக சிறையில் உள்ள ஹரி நாடாருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், கிலோ கணக்கில் நகைகளுடன் வலம் வந்த அவரின் மொத்த நகைகளையும் கர்நாடக போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அனைத்தும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.