இவுங்கெல்லாம் செய்யற வேலையில் ரொம்ப கெட்டிக்காரங்க - உங்க பிறந்த தேதி இருக்கா பாருங்க?
பிறந்த தேதியினை வைத்து ஒருவரின் வாழ்க்கை எதிர்காலத்தை கணிப்பதை numerology என்கிறார்கள். ஜாதகம், ஜோசியம், எண் கணிதம் என பலவற்றையும் நம்புபவர்கள் இங்கு அதிகம்.
தமிழக மக்கள் என்பது தாண்டி, உலகளவில் அதனை நம்புபவர்கள் அதிகளவிலே இருக்கிறார்கள். அப்படி சிலருக்காக அவர்களின் பிறந்த தேதியை வைத்து, அவர்களின் செய்யும் வேலையில் உங்களின் குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.
முதலில் உங்களின் பிறந்த தேதி 1 - 9'இல் இருந்தால் அதுவே உங்களின் எண். ஆனால், இரட்டை இழக்க எண்களில் இருந்தால், உதாரணத்திற்கு 14 என இருந்தால், இரண்டையும் கூட்டினால் வரும் 5 உங்களின் எண் - எண் கணிதம் படி.
அவ்வாறு, 4 (4, 13, 22, 31) ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் நீங்கள் என்றால், பிறப்பாலேயே திறமைசாலிகளாக இருப்பார்கள். தலைமை பங்கு உண்டு. பிறருக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஒரு இலக்கை இவர்கள் அதனை கடின உழைப்பை கொட்டி அடைந்து விடுவார்கள். செய்யும் வேலையில் பொறுமையும் அதிகம்.
5 (5,14,23) ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் நீங்கள் என்றால், வேளையில் கடினமாக உழைக்கும் குணத்தை இவர்கள் கொண்டிருப்பார்கள். ஒரே நேரத்தில் பல வேலைகள் எளிதில் செய்வார்கள். செய்யும் வேலையை திறம்பட செய்வதால் எளிதில் பாராட்டுகளை பெறுவார்கள்.
6 (6,15,24) ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் நீங்கள் என்றால் உங்களுக்கு பொறுப்பு, விடாமுயற்சி எப்போதும் இருக்கும். பொறுப்புகளுக்கு ஆசைப்படுவீர்கள். கடினமான உழைக்கவும் விரும்புவார்கள். செய்யும் பணியில் அக்கறை - பொறுப்பு இயல்பாகவே இருக்கும்.
8 (8,17,26) ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் நீங்கள் என்றால் செய்யும் வேலையில் முன்னோக்கி சிந்திக்கும் தன்மை இயல்பாக இருக்கும். கடினமாக உழைப்பு மேற்கொள்வீர்கள். தலைமைத்துவ திறன் இயல்பாக இருக்கும். தெளிவான சிந்தனை ஓட்டம் இவர்களுக்கு அதிகம்.
பொறுப்பு துறப்பு : இணையத்தில் கிடைக்கப்பெறும் நம்பிக்கையின் அடிப்படையில் இவை பதிவிடப்பட்டுள்ளன.