விளையாடுவாரா முகமது ஷமி; வாய்ப்பை கெடுத்த ஹர்திக் - நடந்தது என்ன?
டி20 போட்டிக்கான இந்தியா ஆடும் லெவன் அணியில் ஷமி ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஷமியின் ஆட்டம்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டிக்கான இந்தியா ஆடும் லெவன் அணியில் வேகப்பந்து வீச்சாளார் முகமது ஷமி இடம் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூரியகுமார் யாதவ் தலைமையிலான அணியில் அவர் இடம் பெறவில்லை.
ஹர்திக் செயல்
அவரது உடற்தகுதியில் இந்திய அணி தேர்வாளர்களுக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், ஹர்திக் பாண்டியா பகுதி நேர வேகப்பந்துவீச்சாளராக இருந்தாலும் தான் ஓபனிங்கில் பந்து வீச தயாராக இருப்பதாக இந்திய அணி நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார்.
எனவே கம்பீர் ஒரே ஒரு முழு நேர வேகப் பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங்கை மட்டும் அணியில் சேர்த்துவிட்டு இரண்டு பகுதி நேர பந்து வீச்சாளர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் நிதிஷ் குமாரை அணியில் சேர்த்து அவர்களுடன் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களையும் பிளேயிங் லெவனில் ஆட வைத்தார்.
இதனால்தான் முகமது ஷமிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என தெரிகிறது.