Saturday, Jun 28, 2025

கேப்டன்சியால் பொறாமையா? சூர்யகுமாரிடம் நேரடியாக சொன்ன பாண்டியா!

Hardik Pandya Indian Cricket Team Suryakumar Yadav
By Sumathi a year ago
Report

சூர்யகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியா குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சூர்யகுமார்

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கவுள்ளது.

suryakumar yadav - hardik pandya

ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டனாக வருவார் என்று எதிர்பார்த்திருந்த போது, திடீரென காயத்தை காரணமாக கூறி பிசிசிஐ நிர்வாகம் அவரை ஒதுக்கியுள்ளது. மேலும், துணைக் கேப்டன் பதவியில் இருந்தும் ஹர்திக் பாண்டியாவை தூக்கியுள்ளது.

பாகிஸ்தானுக்கு விளையாட செல்லும் இந்தியா - பிசிசிஐ-யை கண்டுகொள்ளாத ஐசிசி!

பாகிஸ்தானுக்கு விளையாட செல்லும் இந்தியா - பிசிசிஐ-யை கண்டுகொள்ளாத ஐசிசி!

பாண்டியா வாழ்த்து

இந்த கேப்டன்சி விவகாரத்தில் கவுதம் கம்பீரின் தலையீடும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் கொழும்பு சென்றடைந்தனர். இதுகுறித்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

கேப்டன்சியால் பொறாமையா? சூர்யகுமாரிடம் நேரடியாக சொன்ன பாண்டியா! | Hardik Pandya Suryakumar Yadav Wish Viral Video

அதில், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் நட்பு பாராட்டியது தெரிய வந்துள்ளது. கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவிற்கு ஹர்திக் பாண்டியா வாழ்த்து கூறியுள்ளார்.

இதன்மூலம், சூர்யகுமார் யாதவால் தனக்கு எந்தவித பொறாமையும் இல்லை என்று ஹர்திக் பாண்டியா நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.