அணி மீட்டிங்..ஹர்திக் சொன்ன அந்த வார்த்தை; சூர்யகுமார் கடும் அதிருப்தி - முற்றிய மோதல்!

Hardik Pandya Indian Cricket Team Suryakumar Yadav
By Swetha Aug 01, 2024 11:53 AM GMT
Report

அணி மீட்டிங்கில் ஹர்திகின் பேச்சுக்கு சூரியகுமார் யாதவ் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

அணி மீட்டிங்..

டி20 இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் புது தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் அணி அபாரமாக செயல்பட்டு வருகிறது. டி20 உலகக் கோப்பை 2024 தொடர் முடிந்தப் பிறகு ரோஹித் சர்மா ஓய்வு அறிவித்ததால்,

அணி மீட்டிங்..ஹர்திக் சொன்ன அந்த வார்த்தை; சூர்யகுமார் கடும் அதிருப்தி - முற்றிய மோதல்! | Hardik Pandya Speech Makes Suryakumar Yadav Angry

இந்த சமயத்தில் ஹர்திக் பாண்டியாதான் நியமிக்கப்படுவார் என கருதிய நிலையில், புது டி20 கேப்டனாக சூர்யா குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். புது கேப்டன், புது பயிற்சியாளருடன் இலங்கை டி20 தொடரில் பங்கேற்ற இந்திய அணி அபாரமாக செயல்பட்டு 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

இப்போட்டி முடிந்தப் பிறகு, ஓய்வு அறையில் அணி மீட்டிங் நடைபெற்றது.முதலில் பேசிய சூர்யகுமார் யாதவ், ‘‘அனைவரும் சிறப்பாக செயல்பட்டோம். அணியை இன்னமும் மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து,

ஹர்திக் கீழ் விளையாட முடியாது - ரோகித்தை தொடர்ந்து விலக முடிவெடுத்த MI நட்சத்திரங்கள்

ஹர்திக் கீழ் விளையாட முடியாது - ரோகித்தை தொடர்ந்து விலக முடிவெடுத்த MI நட்சத்திரங்கள்

சூர்யகுமார் அதிருப்தி

உங்களது கருத்துகளை கூறுங்கள். யாரையும் புகழ்ந்து பேசாமல், உங்களது பரிந்துரைகளை மட்டும் சொல்லுங்கள்’’ எனக் கூறினார். இதை தொடர்ந்து, அடுத்ததாக பேசிய ஹர்திக் பாண்டியா, ‘‘மூன்றாவது டி20 போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ரிங்கு சிங், சூர்யகுமார் கடைசி ஓவர்களை வீசி வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

அணி மீட்டிங்..ஹர்திக் சொன்ன அந்த வார்த்தை; சூர்யகுமார் கடும் அதிருப்தி - முற்றிய மோதல்! | Hardik Pandya Speech Makes Suryakumar Yadav Angry

இது உண்மையில் சிறந்த கேப்டன்ஸி. மேலும் ஷுப்மன், ரியான் இருவரும் சரியான நேரத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்து 50+ ரன்களை அடித்தனர். அனைவரும் சிறப்பாக செயல்பட்டோம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்’’ என கூறிவிட்டு அமர்ந்தார்.

ஹர்திக்கின் இந்த பேச்சு, சூர்யகுமார் யாதவை கடும் அதிருப்தியடைய செய்தது. அணியை மேம்படுத்த ஆலோசனை மட்டும் கூறுங்கள். யாரையும் புகழ வேண்டாம் எனக் கூறினேன். நேரம் குறைவாக இருக்கிறது. சொன்னதை மட்டும் செய்யுங்கள்’’ என காட்டமாக பேசிதாக தகவல் வெளியாகி உள்ளளது.

முன்னதாக மும்பை இந்தியன்ஸுக்காக விளையாடியபோது, ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவியை கொடுத்தது, ரோஹித், சூர்யகுமார், பும்ரா ஆகியோருக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்பட்டது.தற்போது இந்திய அணிக்காக ஆடும்போதும் இந்த மனக்கசப்பு தொடர்வதுபோல் இருப்பதாக கருதப்படுகிறது.