இலங்கை கிரிக்கெட் தொடர்; ஹர்திக் பாண்டியா விலகல் - என்ன காரணம் தெரியுமா?
இலங்கை கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை தொடர்
இந்தியா கிரிக்கெட் அணி இலங்கை சென்று 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி ஜூலை 27 தொடங்கி ஆகஸ்ட் 7 வரை நடைபெற உள்ளது.
ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், புதிதாக கவுதம் காம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின் இந்திய அணி விளையாட போகும் முதல் போட்டி என்பதால் இந்த தொடரின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி
இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகுவதாக ஹர்திக் பாண்டியா பிசிசிஐயிடம் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில் அணியில் அவர்கள் இடம் பெறுவார்களா யார் கேப்டன் என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இன்னும் சில தினங்களில் இலங்கை தொடரில் ஆட உள்ள இந்திய அணி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan
