அவமானப்படுத்திய ஹர்டிக்? - சைலெண்டான ரோகித்!! வலுக்கும் எதிர்ப்புகளை

Hardik Pandya Rohit Sharma Mumbai Indians IPL 2024
By Karthick May 04, 2024 06:56 AM GMT
Report

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மாவை Impact Player'ஆக வைத்தது விமர்சனங்களை பெற்று வருகின்றது.

மும்பை தோல்வி

தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள மும்பை அணி நேற்று கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த மும்பை அணி, கொல்கத்தா அணி 57 ரன் எடுப்பதற்கு 5 விக்கெட்டை கைப்பற்றியது.

hardik pandya rohit sharma fight in mumbai

ஆனால், அதன் பிறகு கூட்டணி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் மனிஷ் பாண்டே தாக்குப்பிடித்து ஆடி, அணியை முன்னேற்றினர். மனிஷ் பாண்டே 42(31) ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில், வெங்கடேஷ் ஐயர் 70 (52) ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

CSK Play-off வாய்ப்பு எப்படி இருக்கிறது - மண் அள்ளி போடும் SRH?? சவாலை தாண்டி முன்னேறுமா CSK

CSK Play-off வாய்ப்பு எப்படி இருக்கிறது - மண் அள்ளி போடும் SRH?? சவாலை தாண்டி முன்னேறுமா CSK

19.5 ஓவர்களில் கொல்கத்தா அணி 169 ரன்களுக்கு அவுட்டானது.

hardik pandya rohit sharma fight in mumbai

பின்னர் 170 ரன்களை எடுத்தால் வெற்றி என களம் கண்ட மும்பை அணி துவக்கம் முதலே தடுமாறியது. ரோகித் சர்மா 11(12) இஷான் கிஷன்13(7), நமன் தீர் 11(11), திலக் வர்மா 4(6), நிஹால் வதேரா 6(11), ஹர்டிக் பாண்டியா 1(3) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

hardik pandya rohit sharma fight in mumbai

மும்பை அணியில் சிறிது நேரம் ஆதிரடி காட்டிய சூரியகுமார் யாதவ் 56(35) அவுட்டாக மும்பை அணி தோல்வி உறுதியானது. 18.5 ஓவர்களில் மும்பை அணி 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

hardik pandya rohit sharma fight in mumbai

இந்த போட்டியில், மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா Impact Player'ஆகா வைக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அவருக்கு பதிலாக அணியில் நுவான் துஷாரா அணியில் வைக்கப்பட்டார். ஏற்கனவே அணிக்குள் ரோகித் சர்மா மற்றும் ஹர்டிக் பாண்டியா இருவருக்கும் மத்தியில் புகைச்சல் இருப்பதாக கூறப்படும் நிலையில், Impact Player'ஆகா ரோகித் சர்மா அமர்த்தப்பட்டது விமர்சனங்களை பெற்று வருகின்றது.