ஹர்திக் பாண்டியா பதவிக்கு ஆப்பு? அதுக்கு இவர் தான் சரி...ட்விஸ்ட் கொடுத்த இந்திய அணி!
டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு துணை கேப்டன் பதவி கிடைக்காது என கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா
கடந்த 2022ம் ஆண்டு ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கும் முன்பு வரை இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக இருந்தார். அவரது காயத்தால் ஹர்திக் பாண்டியா டி20 அணியின் துணை கேப்டனாக ஆனார் இதற்கிடையில், ஹர்திக் பாண்டியாவும் காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார்.
தற்போது இருவருமே 2024 ஐபிஎல் தொடரில் கேப்டன்களாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது ம்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ள ஹர்திக் பாண்டியா மோசமான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.அவரது தலைமையில் இதுவரை நடந்த ஒன்பது போட்டிகளில் ஆறு முறை தோல்வியை சந்தித்துள்ளனர்.
இவர் தான் சரி
மறுபக்கம் ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக 11 போட்டிகளில் ஆறு தோல்விகளை சந்தித்து இருக்கிறார். இவரது கேப்டன்சியும் சராசரியாகவே இருக்கிறது. ஆனால், டெல்லி அணியில் சரியான அனுபவ வீரர்கள் இல்லாத நிலையிலும் அவர் அணியை சமாளித்து வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், இந்திய அணியின் துணை கேப்டன் பதவி ரிஷப் பண்ட்டுக்கு அளிக்கப்படும் என சொல்லப்படுகிறது. ஒருவேளை ரிஷப் பண்ட்டுக்கு துணை கேப்டன் பதவியை அளிப்பதில் தேர்வுக் குழுவினர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரிடையே மாற்றுக் கருத்துக்கள் நிலவினால் பும்ரா, சூர்யகுமார் யாதவ் அல்லது மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்படும் என கூறப்படுகிறது.