ஹர்திக் பாண்டியாவின் புதிய காதலி? படு வைரலாகும் புகைப்படம் - யார் தெரியுமா!
ஹர்திக் பாண்டியாவின் புதிய காதலி என பாடகி ஒருவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஹர்திக் பாண்டியா
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும், அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச்சும் கடந்த ஆண்டு விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர். இது பெரும் பேசுபொருளாக மாறியது.
பின் ஹர்திக் பாண்டியாவும், ஜாஸ்மின் வாலியாவும் டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து இருவரும் கிரீஸில் ஒன்றாக விடுமுறையில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
ஜாஸ்மின் வாலியா
ஜாஸ்மின் வாலியா பிரிட்டிஷ் பாடகி மற்றும் தொலைக்காட்சி பிரபலம். இவர் ஆங்கிலம், பஞ்சாபி மற்றும் இந்தி மொழிகளில் பாடல்களை வெளியிட்டு பிரபலமானவர்.
இந்நிலையில், இவர் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரில் காண வந்தது இவர்களது காதலை உறுதிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.