விவகாரத்து சர்ச்சை: ஹர்திக்கின் மனைவி நடாஷா பதிவிட்ட கமெண்ட் - கவனிச்சீங்களா?
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, அவரது மனைவி நடாஷா இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஹர்திக் - நடாஷா
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா கடந்த 2020-ம் ஆண்டு செர்பியா நாட்டை சேர்ந்த நடாஷா ஸ்டான்கோவிச் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாண்டியா - நடாஷா இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், இதுகுறித்து இரு தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் இதுவரை வரவில்லை. மேலும் அவர்கள் விவாகரத்து செய்தால் பாண்டியாவின் 70 % சொத்துக்கள் நடாஷாவிற்கு கொடுக்கப்படும் எனவும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.
லைக் & கமெண்ட்
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரும், ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரருமான க்ருணால் பாண்டியா, அவரது மகன் மற்றும் பாண்ட்யாவின் மகனுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
அந்த புகைப்படத்திற்கு நடாஷா ஸ்டான்கோவிச் லைக் செய்து, ஸ்மைலி எமோஜியுடன் கமெண்டும் செய்துள்ளார். இதனால் பார்த்த ரசிகர்கள், அவர்கள் இருவரும் விவாகரத்து செய்துகொள்ளப் போவதில்லை. இதெல்லாம் வெறும் வதந்திகளாக மட்டுமே இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.