தோனி குறித்த பேச்சு - எந்தவித ஆதரவுமின்றி தனியாக நிற்கும் பாண்ட்யா!
மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்திக் பாண்ட்யா குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பேசியுள்ளார்.
ஹர்திக் - ரோஹித்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்பட்டார். இந்த வருடம் அவர் சாதாரண வீரராக விளையாடி வருகிறார்.
தற்போது மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார். ஆனால், ரோஹித் ஷர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, பாண்ட்யாவை கேப்டனாக நியமித்ததில் ரசிகர்களுக்கு உடன்பாடில்லை. இதனால் பாண்ட்யா எந்த மைதானத்தில் விளையாடினாலும் ரசிகர்கள் அதிருப்தி ஒளியை எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே கடந்த சிஎஸ்கே - மும்பை அணியிகளுக்கிடையான போட்டியில் மும்பை அணியின் தோல்வி குறித்து பேசிய ஹர்திக், "ஸ்டெம்பிற்குப் பின்னால் இருப்பவர் (தோனி), அணியின் வீரர்கள் என்ன செய்ய வேண்டுமென்ற அறிவுரைகளை வழங்குகிறார்.
ஆடம் கில்கிறிஸ்ட்
அவரது ஆதரவு அவர்களின் வெற்றிக்குப் பெரும் உதவியாக இருக்கிறது" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தோனி குறித்த ஹர்த்திக் பேசியதை பார்க்கும் போது, ஹர்திக் எந்தவித ஆதரவுமின்றி தனியாக இருப்பதை உணர முடிகிறது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது "தோனி பற்றி ஹர்திக் பேசியது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் அதேசமயம், ஹர்திக் எந்தவித ஆதரவுமின்றி தனித்து நிற்கும் ஒரு ஓநாயைப் போல இருப்பதை அவரது வார்த்தை மூலம் உணர முடிகிறது.
அவரது எதிரணியில் இருக்கும் சிஎஸ்கே-வின் புதிய கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அனுபவமிக்க முன்னணி வீரர் உதவியாக இருக்கிறார். ஆனால், ஹர்திக்கிற்கு அதுபோன்ற ஆதரவுகள் எதுவுமில்லை என்பதே அவரின் வார்த்தைகளில் உணர முடிகிறது” என்று தெரிவித்துள்ளார்.