ஹர்திக் பாண்டியா அளித்த புகார்; சகோதர் கைது - உடைந்த குடும்பம்!

Sumathi
in கிரிக்கெட்Report this article
ஹர்திக் பாண்டியாவின் சகோரர் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா மற்றும் அவர்களது பெரியப்பா மகனான வைபவ் பாண்டியா ஆகிய மூவரும் இணைந்து 2021ல் பாலிமர் நிறுவனத்தை தொடங்கினர்.
அதில் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா தலா 40 சதவீதம் முதலீடு செய்து இருந்தனர். வைபவ் பாண்டியா 20 சதவீதம் முதலீடு செய்ததோடு, நிறுவனத்தையும் நிர்வகித்து வந்தார்.
சகோரர் கைது
இந்நிலையில், வைபவ் பாண்டியா தனியாக ஒரு நிறுவனத்தை தொடங்கி விற்பனையில் ஈடுப்பட்டுள்ளார். மேலும், தனது 20 சதவீத லாபத்தை 33 சதவீதமாக மாற்றி, நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 1 கோடி ரூபாயை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொண்டு இருப்பதாக புகாரளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். இதனால், குடும்பம் இரண்டாக பிரிந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பல அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் ஹர்திக் பாண்டியா, குடும்பத்திலும் பல இன்னல்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.